கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிலிப்பைன்சில் மே 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிலிப்பைன்சில் மே 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 12:25 AM GMT (Updated: 25 April 2020 12:25 AM GMT)

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிலிப்பைன்சில் மே 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிலா, 

பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 30-ந்தேதி முடிவுக்கு வரும் நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், “நாம் ஆபத்தில் இருக்கிறோம். அதனை அதிகரிக்க வேண்டாம். எனவே வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு மே 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என கூறினர்.

இதனிடையே தலைநகர் மணிலாவில் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற 2 ராணுவவீரர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ரோட்ரிகோ துதர்தே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் அரசு எதிராக செயல்பட்டால் நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக பிலிப்பைன்சில் ஊரடங்கை மீறும் நபர்களை சுட்டுக்கொல்ல அந்த நாட்டு ராணுவத்தினருக்கு அதிபர் ரோட்ரிகோ துதர்தே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story