உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது + "||" + UK Prime Minister Boris Johnson has a baby boy

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
லண்டன், 

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. 2 மனைவிகளையும் விவகாரத்து செய்த இவர், கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த ஜோடி திருமணத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அறிவித்தது, மேலும் கோடை கால ஆரம்பத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கேரி சைமண்ட்ஸ் நேற்று லண்டன் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நல்ல முறையில் பிரசவம் பார்த்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் போரிஸ் ஜான்சனும், கேரி சைமண்ட்சும் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், தொற்றில் இருந்து குணமடைந்து, கடந்த திங்கட்கிழமை பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் - போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி
கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் என்று அப்போது அவர் கூறினார்.
2. இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம் நடத்தினார்.
3. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அரசு பொறுப்பை கவனிக்க தொடங்கினார்.
4. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் - டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி
கொரோனா வைரஸ் தாக்கி, லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.
5. உடல்நிலை தேறி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து போரிஸ் ஜான்சன் வார்டுக்கு மாற்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறி வருவதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டார்.