அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 6:18 AM GMT (Updated: 8 May 2020 6:18 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்குமுன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு, பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என்று அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவ பிரிவு சமீபத்தில் எங்களுக்கு தெரிவித்தது என்று வெள்ளை மாளிகை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு, நோய் தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது. அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story