உலக செய்திகள்

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது + "||" + Corona damage in Russia exceeds 3 lakhs

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
ரஷியாவில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது.
மாஸ்கோ, 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2 ஆயிரத்து 699 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 29-ந் தேதிக்கு பிறகு, பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம்பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ளது.
3. ரஷ்யாவில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு
நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.