உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புதல்


உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புதல்
x
தினத்தந்தி 21 May 2020 3:11 AM GMT (Updated: 21 May 2020 3:11 AM GMT)

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

பெய்ஜிங்

சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில்  இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன.

அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றன. இது குறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காசீனா இந்த விஷயத்தில் உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை உலகிற்கு கூற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இது சீனாவின் சொந்த தேசிய சுகாதார ஆணையத்தின் ஒப்புதல் அளித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு ஆரம்ப கட்டங்களில் கொரோனா வைரஸின் மாதிரிகளை அழிக்க பெய்ஜிங் அங்கீகரிக்கப்படாத ஆய்வகங்களுக்கு உத்தரவிட்டதாக அறிவியல் மற்றும் கல்வித் துறையின் அதிகாரி லியு டெங்ஃபெங் கூறி உள்ளார்.

கொரோனாசோதனைகளுக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்தது மட்டுமல்லாமல், ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் மாதிரிகளை சேகரிப்பதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடைசெய்துள்ளதாக லியு டெங்ஃபெங் கூறினார்.

சீனாவின் வைரஸ் மையப்பகுதிக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களின் போது  உகான் ஆய்வகத்தைப் பார்வையிட உலக சுகாதார அமைப்பு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உகானுக்கு பயணம் செய்தனர், ஆனால் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி பார்வையிட அனுமதி கூட பெறவில்லை என்று லியு கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.

இதுவரை இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 116 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன. 

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரெயேசஸ், பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

சீனா அதன் குற்றத்தை மறைக்க ஒவ்வொரு உண்மையையும் திசை திருப்ப கடுமையாக முயற்சிக்கிறது, மேலும் தன்னை  காப்பாற்றுவதற்காக அதன் கூட்டாளிகளை தியாகம் செய்வதில் அது தயங்காது. உலக சுகாதார அமைப்பு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Next Story