அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா - 767 பேர் சாவு


அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா - 767 பேர் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2020 10:00 PM GMT (Updated: 14 Jun 2020 9:45 PM GMT)

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாஷிங்டன், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா அமெரிக்காவில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. பலர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 767 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 25,396 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 846 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 74 ஆயிரத்து 526 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 436 ஆகவும் உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story