உலக செய்திகள்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது - அமெரிக்கா + "||" + US reviews its global military force posture to counter threat posed by China

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது - அமெரிக்கா

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது - அமெரிக்கா
சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது உலகளாவிய ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது என அமெரிக்கா கூறி வருகிறது.
வாஷிங்டன்

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற ஜெர்மன் மார்ஷல் நிதியத்தின் பிரஸ்ஸல்ஸ் மன்றம் 2020 கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பேசும் போது கூறியதாவது:-

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சீனாவின் ராணுவம் அச்சுறுத்தலாக இருக்கத் தொடங்கியுள்ளது.

சீனா ராணுவத்தை எதிர்ப்பதற்கு நாங்கள் சரியான முறையில் செயல்கொள்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தப் போகிறோம். இது சவால் என்று நாங்கள் நினைக்கிறோம், அதைச் செய்வதற்கான சக்தி  எங்களிடம் உள்ளன என்பதை உறுதிப்படுத்தப் போகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் படை தோரணையை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார், மேலும் ஜெர்மனியில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை சுமார் 52,000 முதல் 25,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மற்றநாடுகளில் அமெரிக்க படையை குறைக்கும் இனி அவர்கள் சொந்த பாதுகாப்பை செய்து கொள்ள வேண்டும்  உலகெங்கிலும் உள்ள எங்கள் கூட்டாளிகள் அனைவருடனும், நிச்சயமாக ஐரோப்பாவில் உள்ள எங்கள் நண்பர்களுடனும் இது குறித்து  முழு ஆலோசனை செய்ய விரும்புகிறோம்.

உலகெங்கிலும் எங்கள் படை தோரணையைப் பற்றி ஒரு மூலோபாய ஆய்வு செய்யப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டன. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, அது ஆப்பிரிக்கா,ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் உள்ளன என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
2. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு
அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
3. அதிபரானால் எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்
எனது நான் அதிபரானால் எச்.1 பி விசாவுக்கு தடை விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
4. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்
சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.
5. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்
கல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என முதல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.