ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு


ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
x
தினத்தந்தி 3 July 2020 10:21 AM GMT (Updated: 3 July 2020 11:03 AM GMT)

ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.


டோக்கியோ, 

4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ அருகே இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் டோக்கியோ நகரிலிருந்து 291 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் என்று அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Next Story