உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 7 July 2020 1:13 AM GMT (Updated: 7 July 2020 1:13 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.    

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலாக் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

எனினும், நகரங்களில் அடர்த்தியான மக்கள் தொகை, போதிய ஒத்துழைப்பு இன்மை ஆகிய காரணங்களால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது.  இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1,17,32,169- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  5,40,119- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால்  இருந்து  6,623,954- குணமடைந்துள்ளனர்.

Next Story