உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப் + "||" + I think we are going to have some very good information coming out soon-Donald Trump

கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்

கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்
நாங்கள் எல்லோரையும் விட அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துகிறோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில்  இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

கடந்த ஒருவாரமாக தினசரி 50 ஆயிரத்தும்  மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனைத் திட்டம் உள்ளது. அமெரிக்கா "மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது" 
வேறு எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானவை. நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம்.

நாங்கள் சிறந்த  தடுப்பூசிகளை  உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன்.

சீனா உலகுக்கு என்ன செய்திருக்கிறது. சீனா உலகத்திற்கு செய்த கொடுமையை மறந்துவிடக்கூடாது. கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம்,அதற்கு சுமார் 20 வெவ்வேறு பெயர்கள் உள்ளன. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அப்படியே உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
3. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...! ஆய்வில் தகவல்
காசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
4. அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது - அமிதாப் பச்சன்
அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.
5. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.