மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு


மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 Sep 2020 6:35 AM GMT (Updated: 5 Sep 2020 6:35 AM GMT)

மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,851-ஆக உள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 522 உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்ந்துள்ளது.   கடந்த ஒரேநாளில் 6,196- பேருக்குத்   கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.   மெக்சிகோவில் இதுவரை கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   6,23,090 -ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் 26.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.86-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 63.87 லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரேசிலில் 40.91 லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.15 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

Next Story