உலக செய்திகள்

விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது + "||" + International Space Station Moves To Avoid Collision With Debris

விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது

விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது
விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது. இந்தாண்டில் நடந்த 3 வது நகர்த்தல் இதுவாகும்.
வாஷிங்டன்: 

சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 260 மைல்கள் (420 கிலோமீட்டர்), ஒரு மணி நேரத்திற்கு சுமார் 17,000 மைல் வேகத்தில் சுற்றுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி குப்பையில் மோதாமல் இருக்க ஒரு முயற்சியை மேற்கொண்டனர். விண்வெளி ஆய்வி மையத்தை நகர்த்தினர் . தற்போது விண்வெளி ஆய்வு மையம் 
பாதிக்படாது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது. இது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள பொருட்களை சிறப்பாக நிர்வகிக்க வலியுறுத்தியது.

ரஷியா மற்றும் அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஒன்றாக இணைந்து இரண்டரை நிமிடம் ஸ்டேஷனின் சுற்றுப்பாதையை சரிசெய்து மேலும் விலகிச் சென்று மோதலைத் தவிர்த்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட ஒரு மைல்) தொலைவில் இந்த குப்பைகள் கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

அச்சுறுத்திய அந்த விண்வெளி குப்பை  உண்மையில் 2018 ஜப்பானிய ராக்கெட்டின் ஒரு பகுதி என்று வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராக்கெட் கடந்த ஆண்டு 77 வெவ்வேறு துண்டுகளாக உடைந்தது.

இந்த விண்வெளி குப்பை மோதி இருந்தால் சோலார் பேனல் அல்லது நிலையத்தின் பிற அம்சங்களை கடுமையாக சேதப்படுத்தும்.

இந்த வகை நகர்த்தல்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் அவசியம். இதுபோன்ற 25 நகர்த்தல்கள் 1999 முதல் 2018 வரை நடந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இது மூன்றாவது நகர்த்தல் இது என்று நாசா தெரிவித்து உள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளில் பூமியின் சுற்றுப்பாதையில்சுழலும்  செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளியில் செலுத்தப்பட்ட பிற பொருட்கள் வெடித்து  சிதறி விண்வெளியில் குப்பைகள் அதிகமாகி உள்ளன.இதனால்  இந்த நடவடிக்கைகள் இன்னும் அடிக்கடி நிகழக்கூடும்.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு: நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ராஜினாமா...?
புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நாசாவின் தலைமை நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
2. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை
11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக பென்னுவின் வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியவிண்கலம்.இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.
3. நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.
4. நாசா வெளியிட்ட வெடிக்கும் நட்சத்திரத்தின் வீடியோ
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெடிக்கும் நட்சத்திரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது.
5. விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.