தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது -டொனால்டு டிரம்ப் பேச்சு


தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது -டொனால்டு டிரம்ப் பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2020 9:11 AM GMT (Updated: 27 Sep 2020 9:11 AM GMT)

தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர். தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில்,  அமெரிக்க தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவாகப்போகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பென்சில்வேனியாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தபால் வாக்குகளைதான் எண்ணப்போகிறோம் என்றும் இவ்விவகாரத்தில் இறுதியில் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் தொடர்ந்து தபால் வாக்கு பதிவு முறையை டிரம்ப் விமர்சனம் செய்துவருகிறார். 


Next Story