டிரம்புக்கு ஆபத்தா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

டிரம்புக்கு ஆபத்தா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2020 1:26 AM GMT (Updated: 4 Oct 2020 1:26 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக குறிவைத்து தாக்குகிறது. இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு 74 வயதாகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக குறிவைத்து தாக்குகிறது. இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு 74 வயதாகிறது.

இந்த நிலையில் அவரை கொரோனா தாக்கி இருப்பது குறித்து கனெக்டிகட் பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் பனச் கூறுகையில், “74 வயதில் டிரம்புக்கு முதலில் அவரது வயதுதான் முதன்மையான ஆபத்து காரணியாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பிற மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “டிரம்ப் உடல் பருமனாக இருக்கிறார். பி.எம்.ஐ. என அழைக்கப்படுகிற அவரது உடல் நிறை குறியீட்டு எண் 30-ஐ தாண்டி இருக்கிறது. உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் வெளிப்பாடுதான். 

கொழுப்பு கூடுதலாக இருக்கிறது. இதை குறைக்க மருந்து எடுத்துக்கொள்கிறார். இந்த நிலை, கொரோனா வைரஸ் தொற்று சிக்கல்களுக்கான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டனர். ஆண் என்பதுவும் கூட கொரோனாவுக்கு எதிரியாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

Next Story