உலக செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பு டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து + "||" + Venezuelan President Maduro congratulates Trump on Corona infection

கொரோனா தொற்று பாதிப்பு டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து

கொரோனா தொற்று பாதிப்பு டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
கராக்கஸ்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. டிரம்ப் தற்போது ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெனிசுலாவின் எதிரியாக இருந்தாலும் அவருடன் நாங்கள் எங்கள் மனித ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எனவே அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதும், இதனால் டிரம்ப் மற்றும் நிகோலஸ் மதுரோ இடையே பகைமை நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 129-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
3. ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து
ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது- செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்
செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
5. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.