தடுப்பூசிகள் கிடைக்கும்போது சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் - உலக சுகாதார அமைப்பு


தடுப்பூசிகள் கிடைக்கும்போது சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் - உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 4:31 PM GMT (Updated: 7 Oct 2020 4:31 PM GMT)

தடுப்பூசிகள் கிடைக்கும்போது சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தலைவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

ஜெனீவா: 

கொரோனா வைரசை  ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 கு  எதிரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் தயாராகி விடும் என்று 
உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின்  இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டு உள்ள 
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிராக நமக்கு தடுப்பூசிகள் தேவைப்படும், இந்த ஆண்டு இறுதிக்குள் நமக்கு ஒரு தடுப்பூசி 
கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. 

தடுப்பூசிகள் கிடைக்கும்போது சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து தலைவர்களும் ஒற்றுமை 
மற்றும் அரசியல் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

"நாங்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய உண்மையான படிப்பினைகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம். ஆனால் 
இதிலிருந்து கற்றுக்கொள்ளவும் இந்த அமைப்பை மாற்றவும் உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளது என்பதை 
நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன் என கூறி உள்ளார்.

மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் ஒன்பது சோதனை கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. உலக 
சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் தடுப்பூசி உலகளாவிய தடுப்பூசிகளின் ஒரு பகுதியாகும், இது 2021 ஆம் ஆண்டின் 
இறுதிக்குள் 200 கோடி அளவுகளை விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்தம் 172 நாடுகள் உலக 
சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் முயற்சியில் இணைந்துள்ளன . இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தங்களது சொந்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வசதியில் சேர மறுத்துவிட்டன.

தொற்றுநோய்க்கான உலகளாவிய பதிலை ஆராய்ந்த இரண்டு நாள் வாரியக் கூட்டத்தில், ஐ.நா. நிறுவனத்தை 
வலுப்படுத்த சீர்திருத்தங்கள் செய்ய ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அழைப்பு 
விடுக்கப்பட்டது.


Next Story