உலக செய்திகள்

பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார் + "||" + Not acceptable: Donald Trump pulls out of virtual presidential debate with Joe Biden

பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்

பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்
பிடனுடனான அக்டோபர் 15 ஜனாதிபதி விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார் அவருடனான விவாதம் ‘நேரத்தை வீணடிப்பது’ என்று கூறி உள்ளார்.
வாஷிங்டன்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இது  நடத்தப்பட்டால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் அடுத்த விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

“இல்லை நான் ஒரு மெய்நிகர் விவாதத்தில் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை” என்று டிரம்ப் வியாழக்கிழமை ஃபாக்ஸ் பிசினஸுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார். 

ஆனால், இதுகுறித்து ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி  வேட்பாளர் ஜோ பிடன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த 1-ம் தேதி டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால், டிரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு :நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக இருக்கிறேன் டொனால்டு டிரம்ப்
கொரோனா பாதிப்பு நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக இருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
2. டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் - ஜோ பைடன் சொல்கிறார்
டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
3. டொனால்டு டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்கிய டுவிட்டர்; வெடித்த சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
4. டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை என நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
5. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.