உலக செய்திகள்

இதை செய்ய வேண்டாம் கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை + "||" + ‘If you care about safety of 300,000 Canadian passport holders...’: China warns Canada over granting Hong Kongers asylum

இதை செய்ய வேண்டாம் கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

இதை செய்ய வேண்டாம் கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கனடாவிற்கான சீன தூதர் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
டொரோன்டோ

ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களை வன்முறை குற்றவாளிகள் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு முத்திரை குத்தினார்.

மேலும் கனடா அவர்களுக்கு புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என எச்சரித்தார்.

“எனவே கனடா தரப்பு உண்மையில் ஹாங்காங்கில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருந்தால், மற்றும் ஹாங்காங்கில் உள்ள 300,000 கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஹாங்காங்கில் இயங்கும் கனடா நிறுவனங்களின் எண்ணிக்கையில் அக்கறை இருந்தால். , வன்முறைக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அந்த முயற்சிகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும், ”என்று காங் கூறினார்.

கனடாவின் வெளியுறவு மந்திரி ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் காங்கின் கருத்துக்களை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குழப்பமானது  கூறினார்.

கடந்த ஆண்டு ஹாங்காங் மற்றும் பிரதான சீன அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தன.

ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் சீனா ஹாங்காங் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகை ஆதிக்கம் செலுத்த மூன்றாம் உலகப்போரை தூண்டும் சீனா..,ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் எச்சரிக்கை
மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை சீனா பார்ப்பதாக ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் ஒருவர் எச்சரித்து உள்ளார்.
2. இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட ராணுவ பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
3. ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
4. அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் காரணம் என டிரம்ப் கூறினார்.
5. சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை
சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் (ரூ 7329 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.