உலக செய்திகள்

லோ கட் ஜாக்கெட் அணிந்த பெண் பிரதமருக்கு எதிர்ப்பு; ஆதரவாக கொதித்தெழுந்த பெண்கள் + "||" + Finland PM Trolled for 'Modelling' in Low-cut Jacket, Netizens Call Out Sexism by Posting Similar Pics

லோ கட் ஜாக்கெட் அணிந்த பெண் பிரதமருக்கு எதிர்ப்பு; ஆதரவாக கொதித்தெழுந்த பெண்கள்

லோ கட் ஜாக்கெட் அணிந்த பெண் பிரதமருக்கு எதிர்ப்பு; ஆதரவாக கொதித்தெழுந்த பெண்கள்
லோ கட் ஜாக்கெட் அணிந்த பெண் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாடெல்லாம் பெண்கள் லோ கட் ஜாக்கெட் அணிந்தனர்.
ஹெல்சிங்கி

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன்( 34) லோ கட் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில்  இணையதளத்தில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டனர்.

பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்னா மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்சேபம் தெரிவித்தவர்கள், இதனால் வாயடைத்துப் போயினர்.

பெண்கள் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மரீன் சமீபத்தில் ட்ரெண்டி பத்திரிகையின் அட்டைப்படத்தில் தோன்றினார், அதில் அவர் லோ கட் ஜாக்கெட் மற்றும் அழகான நெக்லஸ் அணிந்து போஸ் கொடுத்தார்.

"பிரதமரின் பங்கு ஒரு தலைவராக செயல்படுவதே தவிர பேஷன் மாடலாக அல்ல" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்ற போட்டோஷூட்களில் ஈடுபடுவதன் மூலம், சர்வதேச அரசியலிலும் பொதுமக்களிலும் மரின் தனது சொந்த உருவத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறார் என விமர்சனம் எழுந்தது.

இந்த கருத்துக்கள் பின்லாந்தில் பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, அவர்களில் பலர் பிரதமர் மரீனுக்கு தங்கள் ஆதர்வை காட்ட, பல பெண்கள் இப்போது சட்டைகள் அல்லது பிளவுசுகள் இல்லாமல் லோ கட் ஜாக்கெட்டுகள் உடையணிந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர்.


View this post on Instagram
View this post on Instagram