உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர்கள் 20 பேர் பலி + "||" + Terrorist attack in Afghanistan; 20 soldiers killed

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர்கள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர்கள் 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் அநியாயம் ஆக கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் நிம்ரோஜ் மாகாணத்தின் காஷ்ரோட் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை மாவட்ட கவர்னர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுதவிர 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று சிறைபிடித்து வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.  எனினும் தாக்குதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி எதுவும் கூறவில்லை.  ஆனால், தலீபான் பயங்கரவாதிகள் 24 மாகாணங்களில் தாக்குதல்களை விரிவுபடுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளனர் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் விமான படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் தலீபான்களின் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் மட்டத்தில் இருந்த பலர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 50க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டு ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு உள்ளார்.
3. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; தளபதி உள்பட 10 வீரர்கள் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் எல்லை காவல் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.