சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்கிய இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட்


சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்கிய இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட்
x
தினத்தந்தி 27 Oct 2020 9:33 AM GMT (Updated: 27 Oct 2020 9:33 AM GMT)

இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஆய்வு'க்காக வாங்கி உள்ளது.

ஜெருசலம்

இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஆய்வுக்காக' கொண்டு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற பின்னர் நவம்பர் 1 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சினால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய சாத்தியமான கொரோனா தடுப்பூசிக்கான மனித சோதனைகளை இஸ்ரேல் தொடங்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது :-

திரைக்குப் பின்னால் பல இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய குடிமக்களுக்கு விரைவில் ஒரு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் முயற்சிக்கிறோம்  என கூறினார்.

இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் ஆராய்ச்சி (ஐ.ஐ.பி.ஆர்) மார்ச் மாதத்தில் அதன் "பிரைலைஃப்" தடுப்பூசிக்கான விலங்குகள் சோதனைகளைத் தொடங்கியது. இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சுகாதார அமைச்சகம், மேற்பார்வைக் குழுவும் இப்போது அனுமதி வழங்கி உள்ளன.

வைரஸ் ஆன்டிபாடிகள் உருவாகின்றனவா என்பதை அறிய 18 முதல் 55 வயது வரையிலான 80 தன்னார்வலர்கள் மூன்று வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இரண்டாவது கட்டம், டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 960 பேர் கலந்து கொள்வார்கள்.

அது வெர்றி பெற்றால் 30,000 தன்னார்வலர்களுடன் மூன்றாவது, பெரிய அளவிலான கட்டம் ஏப்ரல் / மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இருந்தால், தடுப்பூசி வெகுஜன பயன்பாட்டிற்கு அனுமதி வழ
ங்கப்படும் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை இல்லை, ஆனால் பல மேம்பட்ட சோதனைகளில் உள்ளன, இதில் ஃபைசர் இன்க், ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் மாடர்னா ஆகியவை அடங்கும்.

90 லட்சம்  மக்கள்தொகை கொண்ட இஸ்ரேல், தினசரி தொற்றுநோய்களின் வீதத்தில் தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் இரண்டாவது கொரோனா வைரஸ் ஊரடங்கை எளிதாக்கத் தொடங்கியது. சனிக்கிழமையன்று நாடு 692 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளது.இது பல வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு  9,000 க்கும் அதிகமானதாக இருந்தது. 2,372 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

Next Story