அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து போராட்டம் வன்முறை வெடித்தது


அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து போராட்டம் வன்முறை வெடித்தது
x
தினத்தந்தி 29 Oct 2020 8:20 AM GMT (Updated: 29 Oct 2020 8:21 AM GMT)

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி கத்தியுடன் சுற்றி திரிந்ததாக வால்டர் வாலஸ் என்ற கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

வால்டர் வாலஸ், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும்நிலையில், அவரது மரணத்துக்கு நீதி கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதில் வன்முறை வெடித்ததையடுத்து பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டன. 


Next Story