பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை; பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு


பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை; பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2020 12:06 AM GMT (Updated: 17 Nov 2020 12:06 AM GMT)

பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த பிரதமர் இம்ரான் கான் தடை விதித்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதியான கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் கடந்த ஞாயிறன்று 24 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக அளவாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அதிகாரபூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.

அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதுபற்றிய தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பின்னர் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்பொழுது, பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் கொரோனாவின் 2வது அலை முன்பிருந்த நிலையை விட அதிகரித்துள்ள சூழலில், இதுபற்றி நாங்கள் ஆய்வு செய்தோம்.  இதன் முடிவில், இந்த தடை அமலுக்கு வருகிறது என கூறினார்.

Next Story