உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலி + "||" + Terrorist attack in Afghanistan - 7 killed, including women and children

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் -  பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்,

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தாகாவில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களும் நிகழ்கின்றன.

இந்நிலையில், வடகிழக்கு நகரமான குந்தூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். டலோகா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோர்ட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

வன்முறையின் உச்சமான இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தலிபான் இயக்கம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை - 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் தொடர் கனமழை, வெள்ளம் - 70 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.
3. ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் கால்நடை சந்தையில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கால்நடை சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 13 பேர் பலி; ராணுவ வீரர்கள் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.