ஜோ பைடன் பலவீனமானவர்; போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை


ஜோ பைடன் பலவீனமானவர்;  போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன  அரசு  ஆலோசகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2020 12:23 AM GMT (Updated: 24 Nov 2020 12:33 AM GMT)

ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.

பெய்ஜிங்,

சீனாவுக்கு எதிரான கடுமையான போக்கை கடைபிடித்து வந்த டிரம்ப் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவினார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். டிரம்பை போல் அல்லாமல் சீனா மீது மென்மையான போக்கை ஜோ பைடன் கடைபிடிப்பார் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சீன அரசின் ஆலோசகர் ஜெங்யோங்கனியான் வேறு விதமான கருத்தை முன்வைத்துள்ளார்.  ஜோ யோங்னியான் கூறுகையில், “ அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது. பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார். எனவே, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியான பைடன் போர்களைத் தொடங்குவார்” என்றார்.



Next Story