அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்


அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
x
தினத்தந்தி 24 Nov 2020 11:15 AM GMT (Updated: 24 Nov 2020 11:15 AM GMT)

அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ

அத்துமீறி  கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடா (Peter the Great Gulf) பகுதியில்  இச்சம்பவம் நடந்துள்ளது.

 இது குறித்து  ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஷிய கப்பல், பசிபிக் கடற்படையில் இருந்து, அமெரிக்க போர்க்கப்பலை கண்காணித்து வந்தது. அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி கடல் எல்லையைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் ரஷியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அட்மிரல் வினோகிராடோவ் என்ற ரஷ்ய போர்க்கப்பல் அமெரிக்க கப்பலை வாய்மொழியாக எச்சரித்தது, அந்த பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதற்காக அதை மோதும் வகையில் அச்சுறுத்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

எச்சரிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க கப்பல் உடனடியாக பொதுவான கடல் பகுதிக்கு திரும்பியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் இப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் ரஷிய கடலுக்குள் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஆனால் அட்மிரல் வினோகிராடோவ் அமெரிக்க போர்க்கப்பலின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மற்றொரு கப்பல் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story