மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை விடுதலை செய்ய அமெரிக்க அரசு எதிர்ப்பு


மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை விடுதலை செய்ய அமெரிக்க அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Dec 2020 10:10 PM GMT (Updated: 1 Dec 2020 10:10 PM GMT)

மும்பை தாக்குதல் தலைமறைவு குற்றவாளியான ராணாவை விடுதலை செய்ய அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். இதில், பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் தஹாவுர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. தலைமறைவு குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்ட அவர், கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா தாக்கல் செய்த மனு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, சிறையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ராணா மனுதாக்கல் செய்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அரசு சார்பில் அரசு வக்கீல் நிகோலா டி.ஹன்னா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நாடு கடத்தும் வழக்கை எதிர்நோக்குபவரை விடுவிக்க வேண்டுமென்றால், அவர் விமானத்தில் தப்பிச்செல்ல மாட்டார் என்றும், சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் நிரூபிக்க வேண்டும். அல்லது விசேஷ சூழ்நிலை நிலவ வேண்டும். ஆனால், ராணா அப்படி நிரூபிக்கவில்லை. ஆகவே, அவரை விடுதலை செய்யக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.


Next Story