உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கறிஞர் ரூடி கிலியானிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Trump Says His Lawyer Rudy Giuliani Has Tested Positive For "China Virus"

அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கறிஞர் ரூடி கிலியானிக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கறிஞர் ரூடி கிலியானிக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வழக்கறிஞர் ரூடி கிலியானி சீனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்

நியூயார்க் முன்னாள் மேயரான ரூடி கிலியானி அதிபர் டிரம்பின் தனி வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்குச் சோதனை செய்ததில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. 

இதை டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரான கிலியானி, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் முறைகேடான தேர்தலில் சளைக்காமல் பணியாற்றிய நிலையில் அவர் சீனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்க முயற்சி:சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
2. டிரம்பிற்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை
டிரம்பின் சேனலுக்கு யூட்யூப் கட்டுப்பாடு விதித்து உள்ளது. 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை விதித்து உள்ளது
3. ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்
ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.
4. டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை ஈரான் அதிபர் ரூஹானி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் ரூஹானி வெளிப்படையாக பேசியுள்ளார்.
5. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.