அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,744 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு:  ஒரே நாளில் 3,744 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 7:19 PM GMT (Updated: 31 Dec 2020 7:19 PM GMT)

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் அதிக அளவாக 3,744 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பிற நாடுகளை விட கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  அந்நாட்டில் கடந்த புதன்கிழமை 2 லட்சத்து 29 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 97 லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது.  இதேபோன்று வியாழ கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் அதிர்ச்சி தரும் வகையில், கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் அதிக அளவாக 3,744 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது அதற்கு முந்தின நாளில் இருந்த 3,725 என்ற அதிக உயிரிழப்பு எண்ணிக்கையை விட கூடுதலாகும்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 414 ஆக உயர்ந்து உள்ளது.

எனினும், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசி வழங்கும் பணிகளை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மேற்கொண்டு வருகிறது.  இதுவரை ஒரு கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 50 டோஸ் மருந்துகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்று அந்த மையம் தெரிவித்து உள்ளது.    கடந்த புதன்கிழமை வரையில் 27.94 லட்சம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story