ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Jan 2021 12:21 PM GMT (Updated: 13 Jan 2021 12:21 PM GMT)

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34.71 லட்சத்தைக் கடந்துள்ளது

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 9.21கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 19.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில், இங்கிலாந்தின் புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் முழுவதும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை ரஷ்யா தடை செய்துள்ளது.
 
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 34,71,053 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 566 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 28,54,088 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,53,595 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story