உலக செய்திகள்

பாகிஸ்தான் இளைஞரால் கொல்லப்பட்ட இந்திய பெற்றோர் ; கொலையாளியை பிடித்து கொடுத்த மகள்கள் + "||" + Indian parents killed by Pakistani youth; Daughters who caught the killer

பாகிஸ்தான் இளைஞரால் கொல்லப்பட்ட இந்திய பெற்றோர் ; கொலையாளியை பிடித்து கொடுத்த மகள்கள்

பாகிஸ்தான் இளைஞரால் கொல்லப்பட்ட  இந்திய பெற்றோர் ; கொலையாளியை பிடித்து கொடுத்த மகள்கள்
துபாயில் இந்திய தம்பதியர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தம்பதியரின் இரண்டு மகள்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சாட்சியளிக்க உள்ளனர்.
துபாய்

இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிரென் ஆதியா(48) மற்றும் அவரது மனைவி விதி(40) ஆகியோர் துபாயில் இருக்கும் ரேபியன் ராஞ்செஸ் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர்.

 கடந்த  ஜுன் 17-ஆம் தேதி 26 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால், இந்த தம்பதியனர் படுகொலை செய்யப்பட்டனர்.  பாகிஸ்தான் இளைஞன், வீட்டில் பரமாரிப்பு வேலைக்காக வந்துள்ளான். அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு, அதை கொள்ளையடிக்க  திட்டுமிட்டு, அவர்கள் இருவரையும் படுகொலை செய்துள்ளான்.

அப்போது வீட்டில் இருந்த இரண்டு மகள்களும் அவனை பிடிக்க போராடி, அவனிடம் கத்தி குத்து  வாங்கி, காயங்களுடன் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர்.இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு அங்கிருக்கும், நீதிமன்றத்தில் வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த விசாரணையின் போது, கொலை செய்யப்பட்ட தம்பதியினர் 13 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க மகள்கள் இரண்டு பேர் சாட்சியளிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் அதிகரித்து வரும் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை - சுகாதார ஆணைய அதிகாரி தகவல்
துபாய் நகரில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரித்துள்ளது என துபாய் சுகாதார ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு
கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது.
3. துபாயில் இருந்து ரப்பர் மூலம் தங்கம் கடத்தி வந்த பயணி
துபாயில் இருந்து ரப்பர் மூலம் தங்கம் கடத்தி வந்த பயணியை புனே விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
4. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீக்கம்
துபாயில் இருந்து விமான சேவை வழக்கம் போல் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.