உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது + "||" + Corona vaccination has begun in Pakistan

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
 இஸ்லாமாபாத்,

இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் பணி தொடங்கியது. தற்போது வரை சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கியது. சீனா 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் வழங்கியது. இந்த நிலையில் இன்று பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். முதலில் சுகாதாரத் பணியாளர்களுக்கும், அதன்பின் மூத்த குடிமக்களுக்கும், அதன்பின் மற்றவர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதம் வரை செயல்திறன்மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 500 தடுப்பூசி மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது அதிகரிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வன்முறை எதிரொலி: பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்
பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.
2. கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 91 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார அமைச்சகம் தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 91 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார அமைச்சகம் தகவல்.
3. பாகிஸ்தானில் வசித்துவரும் பிரான்ஸ் குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்
பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை - சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
தலைமை நீதிபதியுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறியதாக பேட்டி அளித்தார்.
5. தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.