நேபாள அரசியல் குழப்பம்: இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அதரவு கோரும் பிரசண்டா !


நேபாள அரசியல் குழப்பம்: இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அதரவு கோரும் பிரசண்டா !
x
தினத்தந்தி 9 Feb 2021 11:39 PM GMT (Updated: 9 Feb 2021 11:39 PM GMT)

நேபாள நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் கலைத்து பிரதமர் கேபி சர்மா ஒலி நடவடிக்கை எடுத்தார்.

காத்மாண்டு,

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஓலி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) இணைத் தலைவா் புஷ்பகமல் தஹல் பிரசண்டா தெரிவித்தாா்.

காத்மாண்டில் செய்தியாளா்களை சந்தித்தபோது பிரசண்டா கூறியதாவது:

நாடாளுமன்றத்தை கலைத்து அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக பிரதமா் ஓலி மேற்கொண்ட நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஆமோதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் முந்தைய நிலைக்கு திரும்பவில்லையெனில், நாடு கடுமையான அரசியல் நெருக்கடியில் மூழ்கும்.  எனவே எங்கள் போராட்டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்

Next Story