உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + More than 3.5 lakh people in the UAE have recovered from corona

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துள்ளது.
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண் ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 51 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் அதிகப்பட்சமாக 20 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,093 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அமீரகத்தில் 12 ஆயிரத்து 209 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,59,056 ஆக அதிகரித்துள்ளது.
2. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,09,650 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,135 ஆக அதிகரித்துள்ளது.
5. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,37,049 ஆக அதிகரித்துள்ளது.