ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 21 Feb 2021 10:08 AM GMT (Updated: 21 Feb 2021 10:08 AM GMT)

ஆஸ்திரேலியாவில் முதற்கட்டம் ஆக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை பிரதமர் ஸ்காட் மோரிசன் போட்டு கொண்டார்.

கேன்பெர்ரா,

ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது.  இதில், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  இந்த நிகழ்வில், பிரதமர் ஸ்காட் மோரிசன் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டு கொண்டார்.

இதேபோன்று தலைமை மருத்துவ அதிகாரி பால் கெல்லி மற்றும் முதியோர் இல்லவாசிகள் சிலர் மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தடுப்பூசிகளை போட்டு கொண்டனர்.

இரண்டாம் உலக போரில் பங்கு பெற்றவரான ஜேன் மலிசியாக் (வயது 84) என்பவர் கொரோனா தடுப்பூசியை பெற்று கொண்டு முதல் ஆஸ்திரேலியர் ஆவார்.

அந்நாட்டு சுகாதார மந்திரி கிரெக் ஹன்ட் கூறும்பொழுது, தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசியை போட்டு கொள்வது என்ற முடிவானது என கூறியுள்ளார்.

அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி அல்பேனிஸ் இன்னும் ஒரு சில நாட்களில் தடுப்பூசி போட்டு கொள்ள இருக்கிறார்.

Next Story