உலக செய்திகள்

நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் + "||" + Sudanese plane makes emergency landing after a cat hijacks cockpit

நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

நடுவானில் விமானியை தாக்கிய பூனை  அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானம்
சூடானில் பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் வைத்து பூனை ஒன்று விமானியை ஆக்ரோஷமாக தாக்கியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கார்ட்டூம்

சூடான் தலைநகரான கார்ட்டூமில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு அந்த பயணிகள் விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சுமார்  30 நிமிடங்களில் விமானியின் அறைக்குள்  நுழைந்த விமானிகள் மீது பாய்ந்து அந்த பூனை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.

பூனை பயணிகள் விமானத்தின் விமானிகளுக்கான அறையில் பதுங்கி இருந்துள்ளது. மட்டுமின்றி அது மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து பூனையை வெளியேற்றிய பின்னரும் இரவு முழுவதும் அந்த விமானம் புறப்படாமல் தாமதமானதாக தகவல் வெளியானது.உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலின்படி, துப்புரவு அல்லது பொறியியல் மதிப்பாய்வின் போது பூனை விமானத்தினுள் புகுந்து பதுங்கியிருக்கலாம் என கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்
இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
3. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
4. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்
5. மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.