அமெரிக்கா- மெக்சிகோ எல்லை அருகே நடந்த சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15- பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ எல்லையில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டிய பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 6.16- மணியளவில் விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 பேருடன் சென்ற எஸ்.யூவி ரக வாகனம் டிரக் சென்று கொண்டிருந்த பாதையில் புகுந்ததாகவும் இதனால் விபத்து நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 14- பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும், தீவிர காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப்பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.