உலக செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணி - இந்தியாவுக்கு ஒப்பந்தம் வழங்க இலங்கை அரசு முடிவு + "||" + Construction of Western Container Terminal at Colombo Port - Government of Sri Lanka decides to award contract to India

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணி - இந்தியாவுக்கு ஒப்பந்தம் வழங்க இலங்கை அரசு முடிவு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணி - இந்தியாவுக்கு ஒப்பந்தம் வழங்க இலங்கை அரசு முடிவு
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.
கொழும்பு,

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தங்களை சமீபத்தில் திடீரென்று இலங்கை ரத்து செய்தது. இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது.

இந்த ஒப்பந்தங்களை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரத்து செய்ததாக இலங்கை கூறியது. அதே வேளையில் கொழும்பு துறைமுகத்தில் தெற்கு பகுதியில் முனைய பணிகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனால் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னணியில் சீனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கேகிலியா ராம்புக்வெல்லா கூறும் போது, துறைமுகத்தில் மேற்கு கண்டெய்னர் முனையத்தை மேம்படுத்தும் பணியை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்க இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.