உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவும் புதிய செயற்கைக்கோள் + "||" + UAE's New satellite to help detect air pollution

ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவும் புதிய செயற்கைக்கோள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவும் புதிய செயற்கைக்கோள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாடு தொடர்பாக அளவீடு செய்யும் வகையில் ‘டிஎம் சாட் 1’ என்ற புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் துபாய் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் அடிப்படையில் அமீரகத்தில் இருக்கும் காற்று மாசுபாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் புழுதிக் காற்று பொதுவாக இருக்கும். இதன் காரணமாக பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த காற்று மாசுபாட்டை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும், தேவையான முன்னெசரிக்கை மேற்கொள்ளவும் இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு?
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
2. அபுதாபியில் 165 மீட்டர் உயரம் கொண்ட 144 மாடிகள் பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் தரைமட்டம்
அபுதாபியில் 1 165 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
3. ஐக்கிய அரசு அமீரகம்: இஸ்லாமிய சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்ன?
தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது.