ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,013 பேருக்கு கொரோனா


ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,013 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 March 2021 8:58 PM GMT (Updated: 21 March 2021 8:58 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,240 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,433 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 16,469 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story