அமெரிக்க விசா மீது டிரம்ப் போட்ட தடை காலாவதி; இந்தியர்கள் பலன் அடையலாம்


அமெரிக்க விசா மீது டிரம்ப் போட்ட தடை காலாவதி; இந்தியர்கள் பலன் அடையலாம்
x
தினத்தந்தி 1 April 2021 5:29 PM GMT (Updated: 1 April 2021 5:29 PM GMT)

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ருத்ர தாண்டவமாடியது.

அப்போது எச்-1பி உள்ளிட்ட அமெரிக்க விசாக்களுக்கு அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் 6 மாத காலத்துக்கு தடை விதித்தார். கடந்த டிசம்பரில் அந்த தடை முடியவிருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு அவர் நீட்டித்தார்.நேற்று முன்தினம் இந்த தடை முடிந்தது. தடையை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நீட்டிக்கவில்லை. இதனால் டிரம்ப் உத்தரவு காலாவதியாகி விட்டது. 

எச்-1பி விசா உள்ளிட்ட பிற விசாக்கள் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்படும், டிரம்பின் இந்த விசா கொள்கை கொடூரமானது என ஜோ பைடன் ஏற்கனவே உறுதி அளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.டிரம்ப் பிறப்பித்த விசா தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. ஜோஷ் ஹாவ்லே விடுத்த வேண்டுகோளை ஜோ பைடன் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.எச்-1பி விசாக்களால் இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை அமெரிக்காவில் பெற்று வந்த நிலையில் டிரம்பின் தடை பெரும் தடைச்சுவராக அமைந்தது. இப்போது அந்த தடைச்சுவர் அகற்றப்பட்டு விட்டதால் இனி இந்தியர்கள் நல்ல வேலைவாய்ப்பை பெற வழிபிறந்துள்ளது.

Next Story