பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!


பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!
x
தினத்தந்தி 15 April 2021 11:07 PM GMT (Updated: 16 April 2021 2:10 AM GMT)

இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.

லண்டன், 

இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில், பால் ஏற்றிக்கொண்டு கார்மர்தென்ஸ்ரீங் பகுதியில் உள்ள சாலையில் நேற்று டேங்கர் லாரியில் பால் ஏற்றுக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த டேங்கர் லாரி டுலைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது. இதனால், டுலைஸ் ஆறு முழுவதும் பாலாறு போன்று காட்சியளிக்கிறது.

விபத்துக்குள்ளான லாரியில் இருந்து டிரைவர் பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆற்றுக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. ஆனாலும், டேங்கர் லாரியில் இருந்த பால் முழுவதும் ஆற்றில் கலந்ததால் ஆறு முழுவதும் வெண்மை நிறத்தில் பாலாறாக காட்சியளிக்கிறது.   



Next Story