இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இங்கிலாந்திலும் பரவியுள்ளதாக தகவல்


இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இங்கிலாந்திலும்  பரவியுள்ளதாக  தகவல்
x
தினத்தந்தி 16 April 2021 11:54 PM GMT (Updated: 16 April 2021 11:54 PM GMT)

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இங்கிலாந்தில் பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பரவி வருகிறது. சுனாமி போல தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளோவரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.  

இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா பி1.617- இங்கிலாந்திலும் பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பி1.617 என்ற உருமாறிய கொரோனா வியூஐ (ஆய்வின் கீழ் உள்ள உருமாறிய கொரோனா பாதிப்பு) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வகை கொரோனா இங்கிலாந்தில் 73 பேருக்கும் ஸ்காட்லாந்தில் 4 பேருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவை இன்னும் பயணம் செய்யக்கூடாத சிவப்பு நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து வைக்கவில்லை. ஒருவேளை இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கும் இத்தகைய தடைகள் விதிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Next Story