உலக செய்திகள்

துருக்கியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 61,028 பேருக்கு தொற்று உறுதி + "||" + Ongoing corona exposure in Turkey: Corona exposure to 61,028 new people

துருக்கியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 61,028 பேருக்கு தொற்று உறுதி

துருக்கியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 61,028 பேருக்கு தொற்று உறுதி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 61,028 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,84,624 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 346 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 36,613 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,92,129 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 5,55,882 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.82 கோடியாக அதிகரித்துள்ளது.
2. உத்தரபிரதேசம்: கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
3. தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு
இந்தியா கொரோனா வைரசின் பிடியில் சிக்கி, மூச்சு விட திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.
5. துருக்கியில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 283 பேர் பலி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.