இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம்: பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான்


இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம்: பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான்
x
தினத்தந்தி 23 April 2021 8:40 AM GMT (Updated: 23 April 2021 8:40 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணை நின்று உதவ பிரான்சு தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒருநாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 3.30 லட்சத்தை தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், பிரன்சு அதிபர் இமானுவேல் மேக்ரான்  கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியதாக இந்தியாவுக்கான பிரான்சு தூதர் தெரிவித்துள்ளார். 

பிரான்சு தூதர் இமானுவேல் லெனைன் தனது  டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிரான்சு உங்களுடன் இருக்கிறது. எங்களின் ஆதரவை அளிக்க தயாராக இருக்கிறோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story