கொரோனா அதிகரிப்பு: துருக்கியில் ஊரடங்கு அறிவிப்பு


கொரோனா அதிகரிப்பு: துருக்கியில் ஊரடங்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 27 April 2021 3:17 AM GMT (Updated: 27 April 2021 3:17 AM GMT)

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 37,312- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில்  37,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 29 முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 17 வரை துருக்கியில் முழு பொதுமுடக்கம் இருக்கும் என்றும், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.

ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்றும், மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும் என்றும், பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story