கொரோனா வைரஸ் பாதிப்பு; இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு பயண தடை விதித்தது இஸ்ரேல்


கொரோனா வைரஸ் பாதிப்பு; இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு பயண தடை விதித்தது இஸ்ரேல்
x
தினத்தந்தி 1 May 2021 7:01 PM GMT (Updated: 1 May 2021 7:01 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் பயண தடை விதித்துள்ளது.

ஜெருசலேம், 

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெருமளவு மீண்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் பலனாக அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதேசமயம் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் பயண தடை விதித்துள்ளது. அந்த நாடுகள் இந்தியா, பிரேசில் தென்ஆப்பிரிக்கா, உக்ரைன், எத்தியோப்பியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகும்.

இஸ்ரேல் மக்கள் மேற்கூறிய இந்த 7 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்ரேல் வருவதற்கும் தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த பயண தடை நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாகவும் அடுத்த 13 நாட்களுக்கு இது அமுலில் இருக்கும் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

Next Story