மாலத்தீவில் பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவம்; அதிபர் இப்ராகிம் சோலி அதிரடி நடவடிக்கை


மாலத்தீவில் பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவம்; அதிபர் இப்ராகிம் சோலி அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2021 2:27 PM GMT (Updated: 13 May 2021 2:27 PM GMT)

தீவு நாடான மாலத்தீவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 4-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது.

மாலத்தீவில்  ஒரே நாளில் 1,572 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவற்றை கண்டிப்புடன் அமல்படுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு அதிபர் இப்ராகிம் சோலி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி அவர் டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “நாட்டின் சுகாதார அமைப்பின் மீதான சுமையை எளிதாக்கவும், நிலைமை கட்டுக்கு மீறிப்போய்விடாமல் இருக்கவும், சுகாதார விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், “மாலத்தீவு, கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். எனவே கொரோனாவின் மோசமான பரவலைத்தடுப்பதற்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாலத்தீவில் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. போலீஸ் அனுமதியின்றி எந்த வெளிச்செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளது. வழிபாடுகள், உணவுவிடுதிகள் போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளது.


Next Story