ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 24 May 2021 9:22 AM GMT (Updated: 24 May 2021 9:22 AM GMT)

ஒலிம்பிக் போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது பற்றியும் ஜப்பான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோக்கியோ, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  

இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 10 வாரங்களே மீதமுள்ளன.  இந்நிலையில், அந்நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் ஜப்பானில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். 

இதற்கிடையில், தடுப்பூசி போடும் பணிகளையும் ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய தடுப்பூசி மையத்தையும் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய இடங்களில் ஜப்பான் துவங்கியுள்ளது.  இதற்கிடையே,  ஒலிம்பிக் போட்டியை  ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது பற்றியும் ஜப்பான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Next Story