நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தல்


நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தல்
x
தினத்தந்தி 31 May 2021 5:25 AM GMT (Updated: 31 May 2021 5:25 AM GMT)

நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தப்பட்டனர்.இது குறித்து நைஜீரியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்




அபுஜா: 

 வட மத்திய நைஜீரியாவில்  நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ என்ற இஸ்லாமியா பள்ளி உள்ளது. நேற்று மதியம் திடீரென மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்தனர்.  உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர்  மர்மநபர்கள் பள்ளியில் பயின்ற 200 மாணவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். 

பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டனர் என உறுதிப்படுத்த வேண்டி உள்ளது என நைஜர் நகர போலீஸ் அதிகாரி கூறினார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் புகுந்து மாணவர்களை கடத்தி செல்வதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரசு விடுவித்து கொண்டு வருவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 

டிசம்பர் முதல் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை  பணத்திற்காக கடத்திச் செல்லப்பட்டனர்.

பள்ளியின் உரிமையாளர் அபுபக்கர் டெஜினா கூறும் போது 

"அதிக ஆயுதம் ஏந்திய நபர்களுடன் 20 முதல் 25 மோட்டார் சைக்கிள்களை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து சுமார் 150 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுடன் சென்றனர்" என்று கூறினார்.

Next Story